இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு: ஸ்ரீஹரி கோட்டாவிற்கு செல்லும் பள்ளி மாணவர்கள்

இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு:  ஸ்ரீஹரி கோட்டாவிற்கு செல்லும் பள்ளி மாணவர்கள்
X

இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் சென்னை வேளச்சேரி நேரு பள்ளி மாணவிகள் சாதனை. முதல்முறையாக ஸ்ரீஹரி கோட்டாவிற்கு சென்று ஏவுகணை விண்ணுக்கு செல்வதை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை வேளச்சேரி நேரு பள்ளி, மதுரை திருமங்கலம் பள்ளி ஆகிய 2 பள்ளிகள் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் சென்னை வேளச்சேரி நேரு பள்ளி மாணவிகள் சாதனை. முதல்முறையாக ஸ்ரீஹரி கோட்டாவிற்கு சென்று ஏவுகணை விண்ணுக்கு செல்வதை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாட்டின் 75 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அரசு பள்ளி மாணவிகளின் தொழில்நுட்ப பங்களிப்புடன் தயாராகும் இஸ்ரோவின் "ஆசாதி சாட்" என்ற சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் சென்னை வேளச்சேரியில் உள்ள நேரு மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த 10 மாணவிகள் சாதித்துள்ளனர்.

இந்த சாட்டிலைட்டை ஆந்திராவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்க உள்ளார். அங்கு சாதனை படைத்த இந்த மாணவிகள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெறவுள்ளனர்.மத்திய அரசு 75வது சுதந்திர தின விழாவை நாடும் முழுவதும் உற்சாகமாக கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றனர். இவற்றில் ஒன்றாக வான்வெளி அறிவியல் பெண்களின் பங்கேற்பை கௌரவிக்கும் வகையில் அரசு பள்ளி மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன்படி இஸ்ரோவின் "ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா" சார்பில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 75 அரசு பள்ளிகளை சேர்ந்த அறிவியலில் ஆர்வமுள்ள 750 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு "ஆசாதி சாட்" சாட்டிலைட் தயாரிப்பு பணியில் பிப்ரவரி முதல் ஈடுபடுத்தப்பட்டனர்.ஒவ்வொரு பள்ளியிலும் 10 மாணவிகள் குழுவாக ஏற்படுத்தி சாட்டிலைட்டின் ஒரு பாகம் தயாரிப்புக்கான "சிப்" அனுப்பி வைக்கப்பட்டது மாணவிகளுக்கு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆலோசனைகள் வழங்கினர்.

அதன்படி சென்னை வேளச்சேரியில் உள்ள நேரு மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகளுக்கு ஆர்டினோ ஐ.இ.டி. சாப்ட்வேர் கொண்ட சிப் பாகம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் வான்வெளி உயரம், தட்பவெட்பம், ஈரப்பதத்தில் எவ்வாறு இந்த (சிப்) பாகம் செயல்படும் என்பது தொடர்பான புரோகிராம் செய்யப்பட்டு இப்பள்ளி மாணவிகள் 10 பேர் கொண்ட குழு வெற்றிகரமாக நிறைவேற்றி சாதித்துள்ளனர்.

இந்த சாதனை படைத்த இந்த பள்ளி மாணவிகள் 10 பேர் கொண்ட குழு ஸ்ரீஹரிகோட்டாவிற்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு இந்தியா முழுவதிலும் இருந்து 75 பள்ளிகளிலும் அதில் தமிழகத்தில் இரண்டு பள்ளிகள் இதுபோன்ற வெவ்வேறு சிப் பாகங்கள் செயல்பாடுகளை வெற்றிகரமாக முடித்த மாணவிகள் ஒன்று கூடி பொருத்தப்பட்ட அந்த சாட்டிலைட் விண்ணில் ஏவுவதை நேரில் கண்டுகளிக்க உள்ளனர்.மாணவிகள் குழு ஒருங்கிணைப்பு பள்ளியின் தலைமை ஆசிரியர் நேரு, ஆசிரியர்கள் சித்ரா, இலக்கியா ஆகியோர் மாணவிகளுக்கு ஆலோசனை மற்றும் உதவிகள் செய்ததாகவும் அவர்களுக்கு மாணவிகள் நன்றியை தெரிவித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில் : காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவிகளில் எங்களது பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் எங்களது பள்ளி மாணவிகள் அறிவியல் திறனில் தங்களை முன்னதாக அர்ப்பணித்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து இந்த ஒரு அரிய வாய்ப்பு தங்களுக்கு கிடைத்ததாகவும் இந்த வாய்ப்பை பள்ளி மாணவிகள் நன்றாக பயன்படுத்தி கொண்டுள்ளனர். இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.

தமிழ்நாட்டில் இரண்டே பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன சென்னை வேளச்சேரி நேரு பள்ளி, மற்றொன்று மதுரை திருமங்கலம் பள்ளி என்பது குறிப்பிடதக்கது.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....