தமிழ்நாடு சேஃப்டி ப்ரொபஷனல் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக இன்வெஸ்டிகேஷன் பயிற்சி

சென்னை மீனம்பாக்கம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு சேஃப்டி ப்ரொபஷனல் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக எலக்ட்ரிகல்சேஃப்டி ஆபீஸர் மற்றும் ஆக்சிடென்ட் இன்வெஸ்டிகேஷன் பயிற்சி திட்டம் இன்று நடைபெற்றது.கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது இந்த சங்கத்தில் இதுவரையில் 231 உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

இன்று தலைவர். ஆர்.மோகன் .செயலாளர். கே. பழனி துணை தலைவர் முரளி நிர்வாக உறுப்பினர் . எஸ்.அருண் கண்ணன்,ஆர்.பாலாஜி. பீ.நவீன் குமார் , எஸ்.சுடலைமணி உட்பட உறுப்பினர்கள் பலரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

துணை தலைவர் முரளி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் இந்த சங்கத்தில் இணைவதற்கு கட்டாயமாக சேஃப்டி கோர்ஸ் படித்திருக்க வேண்டும் மற்றும் இந்த சங்கத்தில் உறுப்பினர்கள் ஆண்டு உறுப்பினர். வாழ்க்கை நேர உறுப்பினர் மாணவர் உறுப்பினர் என்ற அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்த சங்கமானது வளர்ச்சிக்கும் சேஃப்டி ஆஃபீசர் பாதுகாப்பிற்கும் உறுதுணை புரிகிறது. வரும் ஆண்டில் இந்த சங்கத்தில் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare