/* */

கல்வி மட்டுமல்ல, விளையாட்டும் முக்கியம்!: ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் அபய்சிங் ருசிகர பேட்டி

கல்வி மட்டுமல்ல, விளையாட்டும் முக்கியம் என, சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் அபய் சிங் குறிப்பிட்டார்.

HIGHLIGHTS

கல்வி மட்டுமல்ல, விளையாட்டும் முக்கியம்!: ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் அபய்சிங் ருசிகர பேட்டி
X

செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் அபய் சிங். 

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு ஸ்போர்ட்ஸ் அகடமி துவங்கப்பட்டது. இதனை சிறப்பிக்கும் வகையில் வேளச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் குருநானக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவரும் சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீரருமான அபய் சிங்கை வரவழைத்து அவரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் குருநானக் கல்லூரியின் செயலாளர் மஞ்சித் சிங் நாயர், கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் அபய் சிங்கிற்கு ஊக்கத் தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கி சிறப்பித்தனர்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அபய் சிங், நான் சிறு வயதில் குண்டாக இருந்தேன் என்று, எனது அம்மா பக்கத்து வீட்டில் குடியிருப்பவருடன் விளையாட அனுப்பி வைத்தார். அப்போது, நான் இந்த அளவிற்கு விளையாட்டில் புகழ் பெறுவேன் எனக்கு தெரியாது. ஸ்குவாஷ் விளையாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

உங்கள் பிள்ளைகள், நண்பர்களை ஸ்குவாஷ் விளையாட வையுங்கள், கல்வி மட்டும் முக்கியமில்லை, விளையாட்டும் முக்கியம் என அறிவுறுத்தினார். சென்னையில் இருக்கும்போது, விளையாட்டில் ஆர்வம் இருப்பவர்களுக்கு ஸ்குவாஷ் பயிற்சி அளித்து உதவி செய்ய தாம் எப்போதும் தயாராக இருப்பதாக சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டு வீரர் அபய் சிங் குறிப்பிட்டார்.

Updated On: 14 Jun 2022 3:00 PM GMT

Related News