நன்னடத்தை பிணையை மீறி குற்றச் செயலில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

நன்னடத்தை பிணையை மீறி குற்றச் செயலில் ஈடுபட்டவர்  சிறையில் அடைப்பு
X

சிறையிடலடைக்கப்பட்ட விக்னேஷ்

நன்னடத்தை பிணையில் வெளிவந்து குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்

சென்னை, ஆதம்பாக்கம், அம்பேத்கர்நகர், 4வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் விக்னேஷ்( 24.) இவர் மீது, கஞ்சா கடத்தல், அடிதடி வழக்குகள் உள்ளன.

கடந்த மாதம், 11ம் தேதி மவுன்ட் போலீஸ் துணைக் கமிஷனர் பிரதீப் முன் ஆஜராகி, தான் ஓரு வருட காலத்திற்கு எந்தவொரு குற்ற செயலிலும் ஈடுபட மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். இந்நிலையில், 15ம் தேதி போதைக்காக வலிநிவாரண மாத்திரைகளை விற்பனை செய்ய வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி குற்ற செயலில் ஈடுபட்டதால், அவரை, 330 நாட்கள் ஜாமீனில் வெளிவரமுடியாத சிறை தண்டனை துணைக் கமிஷனர் விதித்து உத்தரவிட்டார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி