குடியரசு தினத்திலும் சட்ட விரோத மது விற்பனை : கண்டுகொள்ளாத போலீஸ்

குடியரசு தினத்திலும் சட்ட விரோத மது விற்பனை : கண்டுகொள்ளாத போலீஸ்
X

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையம் அருகே குடியரசு தினத்தன்று படுஜோராக நடந்த சட்ட விரோத மது விற்பனை

குடியரசு தினத்திலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டதை போலீஸ் கண்டுக் கொள்ளவில்லை என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் சட்ட விரோத மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. குடியரசு தினத்தையும் பொருட்படுத்தாமல், சிறிதளவும் பயமில்லாமல் அங்கேயே மது குடிக்க வைத்து குடிமகன்களை அனுப்பி வைக்கின்றனர்.

ஆதம்பாக்கம் போலீசார் மற்றும் கலால் போலீசார் மதுக்கடைகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதால் அவர்களும் மது விற்பனையை எவ்வித சலனும் இல்லாமல் விற்று வருகின்றனர்.

லஞ்சம் கொடுத்தால் போதும் என்று செயல்படும் காவல் துறையால் ஒட்டு மொத்த காவல்துறைக்கும் அவப்பெயர் ஏற்படும் நிலை உள்ளது. அதனால் உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு சட்ட விரோதமாக நடக்கும் மது விற்பனையை ஆதம்பாக்கம் பகுதியில் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
ai healthcare products