குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது
X
கணவன் மனைவியிடையே தகராறு, குடிபோதையில், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது.

சென்னை தரமணி, மகாத்மா காந்தி நகர், காமராஜர் குறுக்கு தெருவில் கடந்த 25 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வந்தவர் துரைசாமி(67), இவரது மனைவி வேந்தா(67), இருவருக்கும் குழந்தை இல்லாததால் அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கம்.
அதே போல் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த துரைசாமி, வேந்தாவை, இடது மார்பு மற்றும் வலது விலாவில் கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். இதில் நிகழ்விடத்திலேயே மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
மனைவியை கொலை செய்து விட்டு வீட்டு வாசலிலேயே காத்திருந்த கணவரை தகவலறிந்து வந்த தரமணி போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!