வார விடுப்பு அளிக்காமல் அலைக்கழித்ததால் தலைமை காவலர் தற்கொலை முயற்சி
வார விடுப்பு அளிக்காமல் அலை கழித்ததால் காவல் நிலையம் முன்பு தலைமை காவலர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி.
சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் செந்தில் குமார், 2002 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தவர், இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வார விடுப்பு அளிக்காமல் அலை கழிக்கப்பட்டாராம். காவல் நிலையத்தில் எழுத்தராக பணியில் இருக்கும் ஞான சேகர் என்பவர் தனக்கு அனுசரித்து செல்லும் போலீசாருக்கு மட்டும் வார விடுப்பு அளிப்பதாகவும், மற்றவர்களுக்கு விடுப்பு வழங்காமல், வாட்சாப் குழுவில் அவர்களை பற்றி அவதூறு பரப்புவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் செந்தில்குமார் என்ற தலைமை காவலர் வாட்சாப் குழுவில் எழுத்தருக்கு நீங்கள் செய்வது முறையல்ல, இதனால் பல போலீசார் மன உளைசாலில் இருப்பதாக பதிவிட்டுள்ளார். இது குறித்து ஆய்வாளர் சந்திர மோகனிடம் முறையிட்டும் பயனில்லாமல் போனதானால், விரக்தியின் உச்சிக்கே சென்ற செந்தில் குமார் காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சக போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து கிண்டி உதவி ஆணையர் சிவா அவர்கள் அவரது அலுவலகத்தில் வைத்து செந்தில்குமார் மற்றும் எழுத்தர் ஞான சேகரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu