சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டியை கொலை செய்த போதை ஆசாமி கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டியை கொலை செய்த போதை ஆசாமி கைது
X

சென்னை ஆதம்பாக்கத்தில் கொலை நடந்த இடம்.

Drug addict Asami arrested for killing grandmother in Adambakkam, Chennai

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 26வது சந்தை சேர்ந்தவர் வெள்ளத்தாள்(60), இவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.எதிர் வீட்டில் வசித்து வருபவர்கள் குமார் -அம்மாயி தம்பதியினர். இவர்களது மகன் விக்கி(எ) விக்னேஷ், இவர் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பள்ளி மாணவி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு இரு தினங்களாக சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரவு 10 மணியளவில் அதே போல் மாணவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் பயந்து போன வீட்டின் உரிமையாளர் கதவை அடைத்து விட்டார், இருப்பினும் வீட்டின் உரிமையாளரை வெட்டுவதாக கூறி கத்தியை எடுத்துக் கொண்டு விக்னேஷ் தெருவில் ஓடியுள்ளார்.

வீட்டு உரிமையாளரின் அலறல் சத்தம் கேட்டு வெள்ளாத்தாள் வெளியில் வந்து கஞ்சா போதைக்கு அடிமையான விக்னேஷிடம் என்னடா கத்தியுடன் திரிகிறாய் என கேட்டுள்ளார். உடனே அவரை கழுத்து மற்றும் தலையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டார். இதில் நிகழ்விடத்திலேயே மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

கஞ்சா போதையில் மூதாட்டியை வெட்டி விட்டு தப்பிச் சென்ற விக்னேஷ் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை ஆதம்பாக்கம் போலீசார் தீவிரமாக தேடி நள்ளிரவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!