ப்ளுகிராஸ் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட நாய் கண்காட்சி

ப்ளுகிராஸ் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட  நாய் கண்காட்சி
X

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மார்கெட் சிட்டியில், ப்ளுகிராஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பாக 'தி கிரேட் இந்தியன் டாக் ஷோ'வை நடத்தினர்

சென்னை வேளச்சேரியில் ப்ளுகிராஸ் அமைப்பின் சார்பாக நாய் கண்காட்சி நடைபெற்றது

சென்னையில் ப்ளுகிராஸ் அமைப்பின் சார்பாக நாய் கண்காட்சி நடைபெற்றது.
சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மார்கெட் சிட்டியில், ப்ளுகிராஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பாக 'தி கிரேட் இந்தியன் டாக் ஷோ'வை நடத்தினர்.
இதில் வீடற்ற செல்லப்பிராணிகளை தத்தெடுப்பதற்கும், பூர்வீக நாய் இனங்களைக் கொண்டாடுவதற்கும், வம்சாவளி நாய்களை விட இந்திய நாய் இனங்களைத் தத்தெடுத்தவர்களை அங்கீகரிப்பதற்கும், ப்ளூ கிராஸ் அமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக இந்நிகழ்வை நடத்தி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு பிரபல நடிகை அமலா அக்கினேனி மற்றும் நடிகை சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், டாக்டர் ஆர்.ஜெயபிரகாஷ், நிஷ்கா சோராரியா நடுவர்களாகவும் கலந்து கொண்டனர்.
149 நாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அதன் உரிமையாளர்களோடு உடைகள் அணிந்து நடந்து வந்தது பார்வையாளர்களையும், வளர்ப்பு பிராணிகள் வளர்ப்போரையும் வெகுவாக கவர்ந்தது. நாய்கள் கிடைத்தது குறித்த குட்டி ஸ்டோரி கேட்கப்பட்டு அதனை உரிமையாளர்கள் தெரிவித்தனர். கலந்து கொண்ட அனைத்து நாய்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும், இந்திய நாய்களை தத்தெடுக்க, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக ப்ளு கிராஸ் அமைப்பின் பொது மேலாளர் வினோத் குமார் கூறினார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி