திமுக கவுன்சிலர் நண்பரை தாக்கி 6 பவுன் சங்கிலியை பறித்ததாக குற்றச்சாட்டு
காயமடைந்த சதீஷ்
திமுக கவுன்சிலர் அவருடன் இருந்த நபரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து 6 சவரன் தங்கச் சங்கிலியை பறித்ததாக குற்றச்சாட்டு.
சென்னை வேளச்சேரி 176 வார்டு திமுக கவுன்சிலர் வே.ஆனந்தம், இவரது ஆதரவாளரான சதீஷ் என்பவருக்கும், இவருக்கும் அரசு வேலை வாங்கி தருவது தொடர்பாக பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக கவுன்சிலர் அலுவலகத்தில் வைத்து சதீஷ் என்பவரை, திமுக கவுன்சிலர் ஆனந்தம், அவரது மைத்துனர் பிரபு, மற்றும் ஆர்.கே.குட்டி ஆகியோர் சேர்ந்து இரும்பு ராடால் கடுமையாக தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டதாக சதீஷ் கூறுகிறார். காயமடைந்த சதீஷ் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டார்.வேளச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் அவரிடம் கேட்ட போது என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் கவுன்சிலர் ஆனந்தம் தான் காரணம் என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu