திருவான்மியூரில் ஆதரவற்ற குழந்தைகளோடு தீபாவளியை கொண்டாடிய போலீசார்

திருவான்மியூரில் ஆதரவற்ற குழந்தைகளோடு தீபாவளியை கொண்டாடிய போலீசார்
X
சென்னை திருவான்மியூரில் ஆதரவற்ற குழந்தைகளுடன் போலீசார் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.
சென்னை திருவான்மியூரில் ஆதரவற்ற குழந்தைகளோடு பட்டாசு வெடித்து தீபாவளியை போலீசார் கொண்டாடினர்.

சென்னை, திருவான்மியூர் காவல் நிலையத்தின் சார்பாக தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவான்மியூர் காவல் ஆய்வாளர் ராமசுந்தரம் அவர்களின் ஏற்பாட்டில் திருவான்மியூரில் இயங்கிவரும் நகர்புற வீடற்றோருக்காண குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 23 குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வழங்கினர்.

இதில் தரமணி சரக உதவி ஆணையர் ஜீவானந்தம் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் குழந்தைகளோடு சேர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளியை அவர்களோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!