வேளச்சேரியில் கிழிந்து தொங்கும் விளம்பர பேனரால் விபத்து ஏற்படும் அபாயம்
வேளச்சேரியில் கிழிந்து தொங்கும் இராட்சத விளம்பர பேனரால் விபத்து ஏற்படும் அபாயம் கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்.
வேளச்சேரியில் கிழிந்து தொங்கும் இராட்சத விளம்பர பேனரால் விபத்து ஏற்படும் அபாயத்தை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் முன் வரவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.
சென்னை வேளச்சேரி கைவேலி மேம்பாலம் அருகில் ஒரு கட்டடத்தின் மேல் அனுமதியின்றி, நீதிமன்ற உத்தரவை மீறி, வணிக ரீதியான இராட்சத விளம்பர பேனர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பர பேனர் காற்றில் கிழிந்து ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற விளம்பர பேனர்கள் வைக்க நீதிமன்றம் தடைவித்திருந்தும், சமூக விரோதிகள் சிலர் வைத்திருப்பதை மாநகராட்சி அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu