தரமணியில் இராட்சத பேனரால் விபத்து அபாயம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தரமணியில் இராட்சத பேனரால் விபத்து அபாயம்:  கண்டுகொள்ளாத அதிகாரிகள்
X

கிழிந்து தொங்கியபடி விபத்து அபாயம் ஏற்படுத்தும் விளம்பர பேனர். 

தரமணியில் கிழிந்து தொங்கும் இராட்சத விளம்பர பேனரால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

சென்னை தரமணி 100 அடி சாலை ரவுண்டனா அருகில், ஒரு கட்டடத்தின் மீது அனுமதியின்றி சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள இராட்சத விளம்பர பேனர், காற்றில் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. பேனர் கிழிந்து கீழே விழுந்தால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் விபத்து நேரிட வாய்ப்பாக அமையும்.

இதனை உடனடியாக காவல் துறையும், மாநகராட்சி அதிகாரிகளும் அகற்றி மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவுபடி, 25000 ரூபாய் அபராதம் விதித்தால் இது போன்ற விளம்பர பேனர்கள் வைப்பவர்களை கட்டுப்படுத்த முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Tags

Next Story