கிரிக்கெட்: இறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய குருநானக்கல்லூரி ஆடவர் அணி

கிரிக்கெட்:  இறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய குருநானக்கல்லூரி ஆடவர் அணி
X

சென்னையில் அகில இந்திய கல்லூரிகளுக்கிடையேயான டி-20   கிரிக்கெட் போட்டி

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் பவித் சிங் நாயர் நினைவாக அகில இந்திய கல்லூரிகளுக்கிடையேயான டி-20 கிரிக்கெட் போட்டி

இறுதி ஆட்டத்திற்கு குருநானக் ஆடவர் அணி முன்னேறியுள்ளது. நாளை இறுதிப் போட்டி நடக்கிறது..

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் பவித் சிங் நாயர் நினைவாக அகில இந்திய கல்லூரிகளுக்கிடையான டி-20 கிரிக்கெட் போட்டி 8வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. ஆடவர், மகளிர்களுக்கென போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மும்பை, கேரளா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு என ஆடவர் பிரிவில் 16 அணிகளும், மகளிர் பிரிவில் சென்னை முழுவதிலும் இருந்து 10 அணிகளும் கலந்து கொண்டு மோதின.

இதில் இன்று ஆடவர்களுக்கான அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் காலை குருநானக் கல்லூரியும், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் மோதின முதலில் பேட் செய்த குருநானக் அணி 20 ஓவருக்கு, 9 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது, பின்னர் விளையாடிய கொங்கு அணி 20 ஓவருக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. 17 ரன்கள் வித்தியாசத்தில் குருநானக் கல்லூரி வெற்றி பெற்று நாளை நடக்கும் இறுதி போட்டியில் விளையாட உள்ளது.

மாலை லயோலா கல்லூரியும், விவேகானந்தா கல்லூரியும் அரையிறுதி போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் வெற்றி பெறும் அணியோடு நாளை குருநானக் போட்டியிடும். ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு இரண்டிலும் குருநானக் கல்லூரி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!