வேளச்சேரி அருகே 40 பேருக்கு கொரோனா தொற்று

வேளச்சேரி அருகே 40 பேருக்கு கொரோனா தொற்று
X
தரமணி பெருங்குடி பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தரமணி பெருங்குடி பகுதியில் உள்ள தனியார் மெடிக்கல் ட்ரான்ஸ்கிரிப்ஷன் நிறுவன ஊழியர்கள் 40 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த ஆண்டில் சென்னையில் ஒரே நிறுவனத்தில் அதிகமான தொற்று கண்டறியப்பட்டது இதுவே முதல் முறை.

கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த இரண்டு பேர் காய்ச்சல் சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் தாமாகவே முன்வந்து பரிசோதித்து கொண்டதில் தொற்று உறுதியானது.

இதையடுத்து இவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட நபர்களை பரிசோதிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த பரிசோதனைகளில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுமேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த தனியார் நிறுவனம் மூடப்பட்டு முழுமையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் எம்ஜிஆா் பிறந்த நாள் கொண்டாட்டம்..!