வேளச்சேரியில் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

வேளச்சேரியில் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்  மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேகர்.

வேளச்சேரியில் குப்பைகளை அள்ளுவதற்காக வந்த மாநகராட்சி ஒப்பந்த பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சென்னை வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகர் 3வது மெயின் ரோடு சந்திப்பில் மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை குப்பைகளை சுத்தம் செய்ய மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர் சீர்ப்படுத்திக் கொண்டிருந்த போது புதை மின் வட கேபிள் சரிவர புதைக்கப்படாத காரணத்தினால் மின் சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
மயங்கிய நிலையில் இருந்தவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விசாரணையில் இவர் பெரும்பாக்கத்தை சேர்ந்த சேகர்(50), என்பது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!