வேளச்சேரில் சமையல் கேஸ் லீக் தீ விபத்து : மூதாட்டி உடல் கருகி பலி

வேளச்சேரில் சமையல் கேஸ் லீக் தீ விபத்து : மூதாட்டி உடல் கருகி பலி
X

தீ விபத்து நடந்த வீடு

வேளச்சேரியில் சமையல் கேஸ் லீக்காகி ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உடல் கருகி இறந்தார்.

சிலிண்டர் ரெகுலேட்டர் லீக் ஆவதை அறியாமல் விளக்கேற்ற முயன்ற மூதாட்டி தீ விபத்திரல் சிக்கினார். எரிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சென்னை வேளச்சேரி ஏரிக்கரை பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு குடிவந்தவர் வடிவம்மாள்(55), இவர் வீட்டில் பூஜை அறையில் சிலிண்டரில் பொருத்தியுள்ள ரெகுலேட்டரில் லீக் ஏற்பட்டு அறை முழுவதும் கேஸ் பரவியுள்ளது.
இதனை அறியாமல் வீட்டில் இருந்த மூதாட்டி பூஜை அறையில் இருந்த விளக்கை ஏற்ற முயன்றுள்ளார். அப்போது ஏற்கனவே லீக் ஆன கேஸ் தீப்பற்றி எரியத் துவங்கியது. இதில் மூதாட்டியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து காயமானது.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் வேளச்சேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூதாட்டியை மீட்டு கே.எம்.சி.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

60% தீக்காயதுடன் சிகிச்சை பெற்று வருவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி இன்று உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story