உலகம் முழுதும் உள்ள 3000 பாம்பு வகைகளில் நாகப்பாம்புகள் 270 வகை உள்ளன
உலகம் முழுக்க, 3000 பாம்பு வகைகள் உள்ளன. இதில், நாகப்பாம்புகள், 270 வகை உள்ளன. அவற்றில், 90 சதவீதம் கொடிய விஷம் கொண்டது. இதில், வெள்ளை நாகம் இலங்கையில் பரவலாக காணப்படுகின்றன.
வெள்ளை நாகம் மூன்று வகைகள் உள்ளன. உடல் முழுவதும் வெள்ளை நிறம் கொண்டது ஒரு வகை. மற்றொன்று ராஜநாகத்தை போல தலையில் யூ அடையாளம் காணப்படும். மூன்றாவது அல்பினோ வகை வெள்ளை நாகம். இதன் தலையில் வட்ட வடிவம் காணப்படும்.இதுபோன்ற வெள்ளை நாகங்கள் பிறவி குறைபாடு காரணமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த, 2017ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளை நாகம் ஒன்று கண்டெடுக்கப் பட்டது. கடந்த, ஜூன் மாதம் கோவை, சுந்தரபுரம் பகுதியில் ஒரு வீட்டில் தஞ்சமடைந்த வெள்ளை நிற நாகம் பிடிபட்டது.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர்., ரயில் நிலையத்தில் வித்தியாசமான நிறத்தில் நாகப்பாம்பு இருப்பதாக புகார் வந்தது. வேளச்சேரி வனத்துறையின் அங்கு விரைந்து பார்த்தபோது, அது அரிய வகை வெள்ளை நாகம் என தெரியவந்தது.அவற்றை லாவகமாக பிடித்து வேளச்சேரி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பிடிபட்ட வெள்ளை நாகம், 3 அடி நீளம் கொண்டதாக இருந்தது. அதனை, கிண்டி சிறார் பூங்காவில் உள்ள பாம்பு பண்ணையிலோ அல்லது அடர்ந்த வனப் பகுதியிலோ விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu