சென்னை தரமணியில் கைவினை பொருட்கள் கண்காட்சி: பீலா ராஜேஷ் துவக்கி வைப்பு

சென்னை தரமணியில் கைவினை பொருட்கள் கண்காட்சி: பீலா ராஜேஷ் துவக்கி வைப்பு
X

சென்னை தரமணியில் கைவினை பொருட்கள் கண்காட்சியை துவக்கி வைத்த தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையர்.

சென்னை தரமணியில் கைவினை பொருட்கள் கண்காட்சியை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையர் துவக்கி வைத்தார்.

சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பொக்கிஷம் என்னும் தலைப்பில் 3 நாட்களுக்கு நடைபெறும் கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையரும், அரசு முதன்மை செயலாளருமான பீலா ராஜேஷ் துவக்கி வைத்தார். பின்னர் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கைவினை பொருட்கள் குறித்து அதனை உருவாக்கிய கலைஞர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கைவினை கலைஞர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, பனை ஓலையால் செய்யப்பட்ட கைவினை பொருட்கள், கைகளால் நெய்யப்பட்ட துணிகள் உள்ளிட்ட பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கைவினை கலைஞர்களுடன், தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப மாணவர்கள் இணைந்து பாரம்பரிய கலையோடு புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி கைவினை பொருட்களை தயாரித்துள்ளனர்.

பொதுமக்கள் இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த துவங்கினால், கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காக்க முடியும் என ஆணையர் பீலா ராஜேஷ் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story