சென்னையில் நகை, பணம் கொள்ளை: மர்ம ஆசாமிகள் கைவரிசை

சென்னையில் நகை, பணம் கொள்ளை: மர்ம ஆசாமிகள் கைவரிசை
X

சென்னை வேளச்சேரியில் கொள்ளை நடந்த வீடு.

சென்னை வேளச்சேரியில் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வேளச்சேரி, வீனஸ்காலனி, 2வது விரிவு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(64). இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு, இவரும், இவரது மனைவியும் தூங்கி கொண்டிருந்தபோது மர்மநபர்கள் குழாய் வழியாக ஏறி மொட்டைமாடிக்கு சென்று வீட்டுக்குள் புகுந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 70 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு, தப்பி சென்றுள்ளான்.

காலை எழுந்த உடன் நகை கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த சீனிவாசன் வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து கைரேகை பதிவுகளை பதிவு செய்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!