சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்பு போதை பொருட்கள் பறிமுதல்!
X
சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான போதை பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகள், தங்கம், போதை பொருட்கள், அரிய உயிரினங்களை கடத்தி வருகின்றனர். அவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்யும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பெர்க் நகரில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்குரிய வகையில் வந்த இரண்டு வெளிநாட்டு பயணிகளை தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது, அவர்களது சூட்கேசில் 15.6 கிலோ அளவிலான ஹெராயின் போதை பொருளை மறைத்து கடத்தி வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த சுமார் 100 கோடி மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!