சென்னை வேளச்சேரியில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது கார்: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி..!

சென்னை வேளச்சேரியில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது கார்: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி..!
X

சென்னை வேளச்சேரியில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்.

சென்னை வேளச்சேரியில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை வேளச்சேரி பிரதான சாலையில், ஐ.ஐ.டி கேட் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரின் முன் பகுதியில் புகை வர துவங்கியுள்ளது. இதனை பார்த்ததும் சுதாரித்து கொண்ட காரில் இருந்த 4 பேரும் காரை சாலை ஓரம் நிறுத்தி விட்டு உடனடியாக வெளியேறினர். இதையடுத்து சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனை பார்த்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை நிறுத்தினர். இதனால் வேளச்சேரி பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் வேளச்சேரி தீயணைப்புத் துறையினர் காரில் பிடித்த மேலும் பரவாமல், வெகு நேரம் போராடி அணைத்தனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காரை ஓட்டி வந்த நபர் பிரசன்ன வெங்கடேஷ் என்பதும், காரில் அவரது தந்தை பாலாஜி மற்றும் உறவினர்கள் ஆனந்த், காமாட்சி ஆகியோர் திருமண நிகழ்வுக்காக திருச்சியில் இருந்து குடும்பத்துடன் வந்துவிட்டு மீண்டும் திருச்சிக்கு திரும்பும் போது தீ விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை கிண்டி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!