பெளத்தம், சமணம், சீக்கிய மதத்திற்கு தனி தகுதியுரிமை வழங்க வேண்டும் : திருமாவளவன்
X
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி அளித்தார்.
By - S.Kumar, Reporter |6 Dec 2021 12:30 PM IST
பௌத்தம், சமணம், சீக்கிய மதத்திற்கு தனி தகுதியுரிமை வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தொழிலாளர்களுக்கு உளதுறை அமைச்சரும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும், பெளத்தம், சமணம், சீக்கிய மதத்திற்கு தனி தகுதியுரிமை வழங்க திருமாவளவன் வலியுறுத்தல்.
சென்னை வேளச்சேரியில் உள்ள தாய் மண் அலுவலகத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, புடவை, பால், பிரட் உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் பேசுகையில் புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று விசிக சார்பில் வீரவணக்கத்தை செலுத்துகிறோம்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் உயரிய ஜனநாயக மாண்பினை இம்மண்ணில் நிலைநாட்டுவதற்காக முழு ஆற்றலையும், அர்ப்பணிப்பு செய்தவர் புரட்சியாளர் அம்பேத்கர், காலம் காலமாக இந்த மண்ணில் நிலவி வருகிற சம்த்துவமின்மைக்கு எதிராக சனாதன அரசியலுக்கு எதிராக கருத்தியல் அடிப்படையில் போராடியவர்.
அதிலிருந்து மக்களை மீட்பதற்கு வழிவகை செய்தவர். அதற்கேற்ப அரசியல்மைப்பு சட்டத்தை வகுத்தளித்தவர். இன்றைக்கு நாம் காணும் சமூக நீதி இந்தியா அம்பேத்கரின் அறிவார்ந்த முயற்சியால் உருவாகி வருகிறது என்பதை நன்றியுணர்வோடு சுட்டுக் காட்டுகிறோம்.
அவர் பல லட்சம் போரோடு 1956ம் ஆண்டு பெளத்தம் தழுவினார் நாக்பூரில், பெளத்தம் தழுவிய அதே ஆண்டில் ஒரு சில மாத இடைவெளியில் காலமாகிவிட்டார்.
இந்த மண்ணின் பூர்வீக குடிகளை ஒடுக்குமுறைகளிலிருந்து மீட்பதற்காக அவர் கண்ட விடுதலை மார்க்கம் தான் பெளத்தம் ஏற்பு என்பது. அத்தகைய பெளத்த மார்க்கத்தை தனி ஒரு மதமாக அங்கீகரிக்காமல் இந்து மதத்தின் ஒரு பிரிவாக ஏற்கக்கூடிய நிலை இங்கு நிலவுகிறது.
அதற்கான தனி சிறப்பு சட்டங்கள் எதுவும் இல்லை திருமணம் வாரிசுரிமை பெளத்தம், சமணம், சீக்கிய ஆகிய மதங்களுக்கு இல்லாத நிலை உள்ளது. ஆகவே பெளத்தம், சமணம் சீக்கியம் ஆகிய மாதங்களுக்கு இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்திற்கு இருப்பதை போல தனி தகுதியுரிமை வழங்க வேண்டும்.
திருமணம் மற்றும் வாரிசுரிமை சட்டங்கள் இயற்றபட வேண்டும் இந்த வீரவணக்க நாளில் வலியுறுத்தவதாக கூறினார். இது குறித்து அணமையில் சமூக நீதித்துறை அமைச்சர் சந்த்தித்து மனு அளித்துள்ளோம். இது குறித்து தமிழக அரசும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மதுரை பல்ககலைகழகத்தில் கடந்த நவம்பர் மாதம் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை தமிழகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகங்களில் மதுரை காமராஜர் பல்கலைகழகமும் ஒன்று.
அது நிதி நெருக்கடியில் சிக்கலுக்குள்ளாகி வருவது வேதனையளிக்கிறது. மாண்புமிகு முதல்வர் இதில் தலையிட வேண்டும் நவம்பர் மாத சம்பளத்தை வழங்கி இதுபோன்ற இடையூறுகள் இனி இல்லாதவாறு ஆவணம் செய்ய வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்தியுள்ளார்.
அதே போல அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி கொண்டிருக்கிற தற்காலிக பணியாளர்கள் 200 பேர் அப்பணியில் இருந்து அப்புறப்படுத்தும் நிலை உள்ளது. அவர்களும் போராடி வருகிறார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்ய ஆவணம் செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
சுகாதார பணியாளர்கள் 1600க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த பணியை வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
நாகலாந்தில் தீவிரவாதிகள் என்ற பெயரில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது பெரும் துயரம் பணிக்கு சென்று வீடு திரும்பிய நிலக்கரி சுரங்க தொழிலாலர்கள் பாதுகாப்புபடையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியாகி இருக்கிறார்கள்.
பாதுகாப்பு படையின் இந்த கவனக்குறைவை கண்டு அதிர்ச்சியடைகிறோம். பொதுமக்களா தீவிரவாதிகளா என்று உறுதிபடுத்தி கொள்ளாமலேயே துப்பாக்கி சூடு நடத்தும் நிலையில் அதிகாரிகள் இருக்கிறார்களா என்கிற கேள்வி எழுகிறது.
இதற்கு உள்துறை அமைச்சரும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும். சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், என்று விசிக சார்பில் வலியுறுத்தினார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu