தி.மு.க. கவுன்சிலரின் பாரில் மது குடிக்க வந்த 2 பேர் மீது தாக்குதல்
சென்னை வேளச்சேரி 100 அடி சாலை, விஜயநகர் பேருந்து நிலையம் அருகில், வேளச்சேரி 176. வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வே.ஆனந்தம் என்பவருக்கு சொந்தமான மதுபான பார் செயல்பட்டு வருகிறது. மதுப்பிரியர்கள் 24 மணி நேரமும் பாரில் அமர்ந்தவாறு மதுக்குடிக்க அனைத்து வசதிகளும் கவுன்சிலர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஏற்படுத்தியுள்ளார்.
மதுப்பிரியர்களும் ஆளும்கட்சி தி.மு.க. கவுன்சிலரின் பார் என்பதால் போலீஸ் பிரச்சனையும் இருக்காது என்பதால் தைரியமாக மது குடிக்க நள்ளிரவு முதல் விடிய விடிய செல்கின்றனர்.
அதே போல் கடந்த 9ம் தேதி இரவு மது குடிப்பதற்காக பிரபுராம், மோசஸ், பிரசாத் உள்ளிட்ட 5 பேர் சென்றனர். அப்போது அங்கு பணிபுரியும் பார் ஊழியர் சரவணன் என்பவரிடம் சைடிஸ் கேட்டுள்ளார் பிரபுராம். ஆனால் சரவணன் சைடீஸ் கொண்டு வராமல் தாமதித்துள்ளார். இது குறித்து பிரபுராம் கேட்டதற்கு பார் ஊழியர் சரவணனுடன் வாக்குவாதம் செய்து பாரின் ஷட்டரை மூடிவிட்டு மது குடிக்க வந்த பிரபுராம், மோசஸ், ஆகியோரை பார் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து சரமாரியாக தாக்கி உடல் முழுவதும் காயம் ஏற்படுத்தியுள்ளனர்.
படுகாயமடைந்த பிரபுராம் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர். வேளச்சேரி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகார் அளித்தும் இதுவரை தி.மு.க. கவுன்சிலரின் பார் ஊழியர் கைது செய்யப்படவில்லை, வழக்குப்பதிவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பார் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்டவிரோதமாக பார் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu