வேளச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக நிவாரணம்

வேளச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக நிவாரணம்
X

வேளச்சேரியில் அதிமுக சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

வேளச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக நிவாரணம் வழங்கியது.

சென்னை வேளச்சேரியில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்து குடியிருப்பு வாசிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

வெள்ள நீர் வடிந்தாலும் ஏழை எளியோரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதினை கருத்தில் கொண்டு அதிமுக அம்மா பேரவை மாநில துணை செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினரும், சூர்யா அறக்கட்டளை நிறுவனருமான, வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி தலைமையில், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் வி.என்.ரவி, மற்றும் கழக அமைப்பு செயலாளர் வா.மைத்ரேயன், ஆகியோர் முன்னிலையில் ஒரண்டியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, நாடார் தெருவில் வசிக்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, தண்ணீர் குடம், 25 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.

தொடர்ச்சியாக மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட ஜெகந்தாதபுரம், திரெளபதி அம்மன் கோயில் தெருக்களில் வழங்கினார். தொடர்ந்து வேளச்சேரி பகுதி மக்கள் அனைவருக்கும் நிவாரண பொருட்களை வழங்க உள்ளார். இதுவரை சுமார் 3000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

Tags

Next Story