ஹைதராபாத்திலிருந்து 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தன!

ஹைதராபாத்திலிருந்து 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தன!
X
தமிழகத்துக்கான 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தது.

தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து 1.01 கோடி தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. அதில் 98 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழக அரசின் கையிருப்பில் 12,000 தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திற்கு 85 ஆயிரம் தடுப்பூசிகள் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்தடைந்துள்ளது. இந்த தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப உள்ளதாகவும், போதிய அளவு கையிருப்பு இல்லாத காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை முதல் தொடங்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!