வேளச்சேரியில் தயார் நிலையில் இருக்கும் 80 தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு வீரர்கள்

வேளச்சேரியில் மழையால் பாதிக்கப்படும் மக்களை மீட்க தயார் நிலையில் 80 தீயணைப்பு மற்றும் மீப்புக்குழு வீரர்கள் உள்ளனர்.

சென்னை வேளச்சேரியில் மழையால் பாதிப்படையும் மக்களை மீட்க தயார் நிலையில் இருக்கும் 80 தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு வீரர்கள்.
சென்னை வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் கடந்த முறை பெய்த அதிகன மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகளிலும் சாலைகளிலும் மழைநீர் முழுவதுமாக தேங்கியதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
இதனால் இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த முறை அதிக அளவில் பாதிப்பிற்க்குள்ளான ராம் நகர், விஜய நகர், ஏஜிஎஸ் காலணி 1 முதல் 10 தெருக்கள், பேபி நகர், டான்சி நகர், ஆகிய பகுதிகளில் வசிக்கக் கூடிய மக்களின் பாதுகாப்பிற்காக 80 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் 6 தீயணைப்பு ஊர்திகளும், மிதவை படகு, லைவ் ஜாக்கெட், மர அறுவை ரம்பங்கள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் அவரச தேவைக்கு 101, 112, 28554309, 28554311 ஆகிய எண்ணில் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டால் உடனடியாக உரிய பாதுகாப்போடு பாதிப்படைந்தோரை மீட்க தயார் நிலையில் உள்ளனர்.

Tags

Next Story
ai and business intelligence