கஞ்சா வியாபாரியிடம் 1 கிலோ கஞ்சா, 2 செல்போன், இருசக்கர வாகனம் பறிமுதல்
கஞ்சா வியாபாரியை விரட்டிச் சென்று . 1 கிலோ கஞ்சா, 2 செல்போன், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார்
கஞ்சா வியாபாரியை விரட்டிச் சென்று 1 கிலோ கஞ்சா, 2 செல்போன், இருசக்கர வாகனத்தை மதுவிலக்கு போலீசார். பறிமுதல் செய்தனர்.
சென்னை ஆதம்பாக்கம், வேளச்சேரியில் கஞ்சா விற்பனை நடப்பதாக அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் செல்வராணிக்கு தகவல் கிடைத்தது.அதனடிப்படையில் உதவி ஆய்வாளர் விமல் தலைமையில் தலைமை காவலர்கள் அச்சுதராஜ், கெளதம், கதிரவன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கஞ்சா வாங்குவது போல் சென்று, கஞ்சா வியாபாரியை செல்போன் மூலம் அணுகினர்.
ஆதம்பாக்கம் ஏஜிஎஸ் காலனி அருகே வரும் படி, கஞ்சா வியாபாரி கூற, அங்கு ஒரு நபரை அனுப்பி வைத்து விட்டு போலீசார் மறைவாக காத்திருந்தனர்.போலீசார் தான் வந்திருப்பதை சுதாரித்து கொண்ட கஞ்சா வியாபாரி இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றார்.உடனடியாக மதுவிலக்கு போலீசார் விரட்டிச் சென்று அவனை பிடித்தனர். விசாரணையில் அவர் பெயர் ராஜு(19), என்பதும் கையில் கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததும் தெரிய வந்தது.
அவனை கைது செய்த போலீசார் ஆதம்பாக்கம், சரஸ்வதி நகரில் உள்ள அவனது வீட்டில் சோதனை செய்து ஒரு கிலோ கஞ்சா, எடை மிஷின், 2 செல்போன், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட நபரை ஆதம்பாக்கம் போலீசாரிடம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu