சென்னை மாநகரில் 1,88,080 பேருக்கு தடுப்பூசி

சென்னை மாநகரில் 1,88,080 பேருக்கு தடுப்பூசி
X

சிறப்பு தடுப்பூசி முகாம் பைல் படம்

சென்னை மாநகரில் 1,88,080 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரில் 200 வார்டுகளில் 1600 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் முதல் டோஸ் தடுப்பூசியை 1,17,470 பேர் செலுத்திக் கொண்டனர். 2வது டோஸ் தடுப்பூசியை 70, 610 பேர் செலுத்திக் கொண்டனர்.

இதன் மூலம் சென்னை மாநகராட்சியில் நடந்த கொரோனா சிறப்பு முகாமில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 80 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Tags

Next Story