தமிழகத்தில் டிசம்பரில் நகர்புற உள்ளாட்சி தேர்தல்: 2 கட்டமாக நடக்கிறது
மாநில தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஜனவரிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தேர்தலை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணை யம் இறங்கி உள்ளது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதனால் அந்தந்த மாவட்டங்களில் மின்னணு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் மண் டல வாரியாக ஆய்வு கூட் டங்களை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நடத்தி வருகிறார்.
நேற்று திருச்சியில் மண்டல ஆய்வுகூட்டம் தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் நடந்தது. இதில் தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூர், புதுகை உள் பட 8 மாவட்ட கலெக்டர்கள், கமிஷனர், எஸ்பிக் கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வரும் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட் டியல் வெளியிடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து 25ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் சவாலான இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என் றார்.
இந்நிலையில் நகர்ப் புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (28ம் தேதி) காலை 11 மணியளவில் நடைபெற் றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச் சர் கே.என்.நேரு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் துறைசார்ந்த செயலாளர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேர்தலை எப்போது, எந்த தேதியில் நடத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகள், கொரோனா வழிகாட்டுநெறிமுறை வெளியிடுதல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் பணிகளை துரி தப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகி றது.
அதன் பிறகு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை முடிவு செய்யும். தீபாவளி முடிந்து தேர்தல் தேதி அறிவிக் கப்படலாம், 9 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலே 2கட்டமாக நடைபெற்றது. அதன்படி பார்த்தால் டிசம்பரில் வாக்குப்பதிவு இருகட்டங் களாக நடத்தப்படலாம் இவ்வாறு தேர்தல் ஆணைய வட்டாரத்தில் பரபரப்பாக கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu