வக்ஃபு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் பெற மானியம்

வக்ஃபு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம்  பெற  மானியம்
X
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட சென்னை மாவட்டத்திலுள்ள 247 வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள்/ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதரப் பணியாளர்கள், தர்காக்கள் மற்றும் அடக்கத்தலங்கள், தைக்காக்கள் ஆஷீர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலைகள் முன்னேற்றம் அடைவதற்காக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டு அமைப்பு சாரா வாரியத்தில் வழங்கப்படுவது போன்று இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறன்றன.

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில்" பதிவு செய்யப்பட்ட சென்னை மாவட்டத்திலுள்ள 247 வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் சமயப்பணிகளை சிறப்பாகவும், செம்மையாகவும் ஆற்றுவதற்கு மானிய விலையில் புதிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களுக்கு வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.25,000/- மானியாக வழங்கப்படும். வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பம் செய்தால்,

1. பேஷ் இமாம், 2 அரபி ஆசிரியர்கள் 3. மோதினார் 4. முஜாவர் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற தமிழ்நாட்டில் வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டை சார்ந்தவராகவும், வயது 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், இருசக்கர வாகனம் ஓட்டுநர் கற்றுணர்வு சான்று (LLR) அல்லது ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள்

எண்.62, இராஜாஜி சாலை, சிங்காரவேலர் மாளிகை, சென்னை-01 என்ற முகவரியில் செயல்படும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது https://chennai.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து இவ்வலுவலகத்தில் வருகிற செம்டம்பர் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்படி திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.ஜெ.விஜயா ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story