சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
X
சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் நாளை அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

  • காமராஜர் சாலையில் பொது மக்கள், சாலையில் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.
  • மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும் போது போர்நினைவுச் சின்னத்தில் இருந்து ( War Memorial) வரும் வாகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விளக்கம் ( Light House) நோக்கி அனுமதிக்கப்படும். கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு (Compulsory Left Diversion) பாரதி சாலை பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
  • வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ( விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படும்)

வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வாகன நிறுத்தம் இடத்தின் ஏற்பாடுகள் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பின்வரும் பார்க்கிங் இடங்கள் ஒதுக்கப்படும்.

1. ஃபோர்ஷோர் சாலை

2. விக்டோரியா வார்டன் விடுதி

3. கலைவாணர் அரங்கம் பார்க்கிங்

4. பிரசிடென்சி கல்லூரி

5. மெட்ராஸ் பல்கலைக்கழகம்

6. டிடி கேந்திராவிற்கு அப்பால் ஆடம்ஸ் சாலை (சுவாமி சிவானந்தா சாலை)

7. MRTS – சேப்பாக்கம்

8. லேடி வெலிங்டன் பள்ளி

9. ராணி மேரி மகளிர் கல்லூரி

10. சீனிவாசபுரம் லூப் ரோடு / மைதானம்

11. PWD மைதானம் (தலைமைச் செயலகம் எதிரில்)

12. செயின்ட் பீட் மைதானம்

13. அன்னை சத்யா நகர்

14. ஈ.வி.ஆர்.சாலை, மருத்துவக் கல்லூரி மைதானம் (வேன் பார்க்கிங்) 15. தலைமைச் செயலகத்தின் உள்ளே (காவல்துறை வாகனங்கள்)

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil