ரேஷன் கடைகளில் உங்களுடைய மொபைல் நெம்பரை மாற்றுவது எப்படி?- முதல்ல இதைப் படியுங்க.....

TNPDS Mobile Number Change -
tnpds mobile number change
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டினால் பாய்ன்ட் ஆப் ஸ்கேல் மெஷின் மூலம் வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பொருட்களை வாங்க முன்பு ரேஷன் கார்டு எனப்படும் குடும்ப அட்டடை வழங்கப்பட்டது. அதில் பொருட்களின் பெயர், மாதம் ஆகியவை பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். அதில் ரேஷன் கடை பணியாளர் நாம் பொருட்களை வாங்கும்போது என்ட்ரி போட்டு கொடுப்பார்.
பிறகு ஸ்மார்ட் கார்டு அனைவருக்கும் வழங்கப்பட்டுவிட்டதால் தற்போது அதனைக்கொண்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துக்குரிய பொருட்களை பெற்று வருகின்றனர். குடும்பத்தில் யாராவது ஒரு நபர் நேரில்சென்று பயோமெட்ரிக் விரல் ரேகை வைத்த பின்னர்தான் தற்போது பொருட்கள் வழங்கப்படுகிறது. ஒரு சிலநேரத்தில் பயோமெட்ரிக் சரிவர வேலை செய்யாத நாட்களில் பொருட்களை வாங்கவே பெரிதும் சிரமப்படுகின்றனர். சர்வர் பிராப்ளம் வேறு அடிக்கடி நடக்கும்.
அதுசரிங்க...ரேஷன் கடைகளில் நாம்பொருட்கள் வாங்கியவுடன் நம்முடைய ஸ்மார்ட் கார்டில் பதிவுசெய்யப்பட்டமொபைல் எண்ணுக்கு நீங்கள் என்னென்ன பொருட்களை வாங்கினீர்கள் என்ற தகவல் வ ந்துவிடுகிறது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு பதிலாக தற்போது வேறு மொபைல் எண்ணை மாற்றம் செய்ய வேண்டும் எனில் நீங்கள் என்னென்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி பார்ப்போமோ?. ஸ்மார்ட் கார்டில் மொபைல் நம்பரை மாற்ற நினைக்கும் அனைத்து தரப்பினருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
டிஎன்பிடிஎஸ்
tnpds mobile number change-தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களிலும் நியாய விலை கடைகளின் மூலம் குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காகிதத்தால் ஆன ரேஷன் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளையும் ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்பட்டன. இவை தமிழ்நாடு பொது விநியோக அமைப்பால் (Tamil Nadu Public Distribution System – TNPDS) செயல்படுத்தப்படுகிறது.
tnpds mobile number changeஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டவுடன் அதனுடன்ஆதார் எண் மற்றும் மொபைல் நெம்பரைஇணைக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு மாதமும் அந்தஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படும்.பல காரணங்களுக்காக உங்களின் ரேஷன் அட்டையில் புதியன பதிவு செய்தல் மற்றும் திருத்தங்கள் செய்ய வேண்டியதிருக்கலாம். அவ்வாறு திருத்தங்களை செய்வதற்கான வசதிகளை TNPDS ஆனது ஆன்லைன் மூலமாகவே வழங்குகிறது.
TNPDS இணையதள சேவைகள்:
tnpds mobile number change
இப்பொழுது உங்களின் ஸ்மார்ட் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கான செயல்முறையை பற்றி காண்போம்.இதற்க்கு முன்பு ரேஷன் அட்டையில் மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமென்றால் 1967 ( OR ) 1800-425-5901 என்ற டோல் ஃப்ரீ எண்ணிற்கு கால் செய்து மாற்றம் செய்துவிடலாம்.ஆனால் இப்பொழுது அவ்வாறு செய்ய முடியாது. அதாவது தற்போது ஆன்லைன் மூலமாக மொபைல் எண்ணை மாற்ற முடியாது.
தாலுகா ஆபீஸ் மூலம்
tnpds mobile number changeநேரடியாக தாலுகாபீசுக்கு சென்று தான் மாற்ற முடியும்.சரி அதற்கு என்னென்ன ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.நீங்கள் செல்லும் போது கீழ்கண்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.ஸ்மார்ட் ரேஷன் கார்டு, ரேஷன் அட்டையில் உள்ள குடும்பத்தலைவரின் ஆதார் கார்டு ,புதியதாக அப்டேட் செய்யும் மொபைல் எண்,மேலே சொன்ன ஆவணங்களை எடுத்துக்கொண்டு தாலுகாபீசிற்கு செல்லவேண்டும். அங்கு ரேஷன் அட்டையில் மொபைல் நம்பர் மாற்ற வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கான படிவத்தை வழங்குவர். அந்த படிவத்தை முழுமையாக நிரப்ப வேண்டும். நிரப்பிய பிறகு அதனுடன் ஆதார் அட்டை நகல் மற்றும் ஸ்மார்ட் கார்டு நகல் ஆகியவற்றை இணைத்து அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
பிறகு சில நாட்களுக்கு உங்களின் ஸ்மார்ட் ரேஷன் அட்டையில் மொபைல் எண் அப்டேட் செய்யப்படும்.மொபைல் எண்ணை மாற்றம் செய்வதை தவிர மற்ற அனைத்து சேவைகளும் TNPDS இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவே பெறலாம். எதிர்காலத்தில் மொபைல் எண்ணை மாற்றும் வசதியை இணையத்தில் கொண்டு வந்தால் அந்த சேவையையும் ஆன்லைன் மூலமாக பெற முடியும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu