தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு குறித்து விரைவில் முடிவு: அமைச்சர் தகவல்
X

அமைச்சர் அன்பில் மகேஷ்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்ச்ர அன்பில் மகேஷ் கூறுகையில், சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை பொறுத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து முடிவு எடுக்கப்படும். ஓரிரு நாட்களில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும்.

தனியார் பள்ளிகள் தொடர்பான புகார்கள், கல்விக் கட்டண புகார்களுக்காக அமைக்கப்பட்டுள் குழுவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பே பாடப்புத்தகம் விநியோகிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கட்டமைப்பைகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்தி விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!