தேர்தல் முடிவு வருகிற மே 2 ம் தேதி சிறப்பாக இருக்கும்: ஸ்டாலின் நம்பிக்கை
திமுக தலைவர் ஸ்டாலின் வாக்களித்துவிட்டு நிருபர்களை சந்தித்து கூறியதாவது:
எங்களது ஜனநாயகக் கடமையை நாங்கள் ஆற்றி இருக்கிறோம். தமிழகம் முழுவதும் மக்கள், அமைதியாக, ஆர்வத்துடன் வாக்களித்துக் கொண்டிருப்பதாக எனக்குச் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இதனுடைய முடிவு மே 2 ம் தேதி சிறப்பாக இருக்கும். அது உறுதி. ஆளும் கட்சிக்கு எதிர்ப்பாக இருக்கிறது என்பதை நான் தெளிவாக உணர்கிறேன்.தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருப்தி என்றும் சொல்ல முடியாது. அதிருப்தி என்றும் சொல்ல முடியாது.
திமுக கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பதை என்னைவிட ஊடகங்களில் இருக்கும் உங்களுக்குத்தான் அதிகமாகத் தெரியும். நீங்களே சொன்னால் மகிழ்ச்சியடைவேன். ஆளும்கட்சியின் தூண்டுதல், தோல்வி பயம் வந்துவிட்டதால், எப்படியாவது தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற முயற்சியில் அவர்கள் ஈடுபட்டார்கள். அதற்குத் தேர்தல் ஆணையம் சம்மதிக்கவில்லை என்ற செய்தியும் தொடர்ந்து கிடைத்தது. பல இடங்களில் ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா நடைபெறுவதாகப் புகார்கள் வருகிறது. அதற்கு தேர்தல் ஆணையம்தான் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதையும் முறியடித்து திமுக நிச்சயமாக வெற்றி பெறும் இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu