தமிழகத்தில் 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 3 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்!
X
தமிழகத்தில் 3 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் மே 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் 28ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

அதன்தொடர்ச்சியாக தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் வெப்பத்தன் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. பருவமழை தொடங்க சற்று தாமதம் ஆனால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.

வடமேற்கு திசையில் இருந்து தரைக்காற்று தற்போது வீசத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக 3 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில்வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்