மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : திமுக சார்பில் வழங்கப்பட்டது

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : திமுக சார்பில் வழங்கப்பட்டது
X

திருவெற்றியூர் கேவிகே குப்பம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக சார்பில்  வழங்கப்பட்ட நல திட்ட உதவிகள் 

திருவெற்றியூர் கேவிகே குப்பம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

உலகம் முழுவதும் டிசம்பர் 3 ஆம் தேதி மாற்றுதிறனாளிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள மாற்றுதிறனாளிகள் 100 பேருக்கு உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அரிசி, எண்ணெய், பருப்பு, மளிகை பொருட்கள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருவொற்றியூர் கே.வி.கே குப்பம் பகுதியில் உள்ள மேற்கு பகுதி திமுக அலுவலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கலந்து கொண்டு மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், 5 ஆவது வட்ட செயலாளர் சொக்கலிங்கம், பகுதி மீனவரணி அமைப்பாளர் எஸ்.செல்வம், முகந்தகுமார், தமிழின்பன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!