சென்னை மாநகராட்சி - திருவொற்றியூர் வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்திய இலவச தடுப்பூசி முகாம்

சென்னை மாநகராட்சி - திருவொற்றியூர் வியாபாரிகள் சங்கம் இணைந்து  நடத்திய இலவச தடுப்பூசி முகாம்
X

சென்னை மாநகராட்சி மற்றும் திருவொற்றியூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச தடுப்பூசி முகாமை வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி தொடங்கிவைத்தார்.

திருவொற்றியூர் வியாபாரிகள் சங்கமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து நடத்திய தடுப்பூசி முகாம் திருவொற்றியூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் அனைத்து இடங்களிலும் இலவச தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதியில் உள்ள உள்ள பொதுநல அமைப்புகள், வியாபாரிகள் சங்கங்கள், சமூக நல அமைப்புகள் கூட்டமைப்பு இந்த தடுப்பூசி முகாம்கள் சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் திருவொற்றியூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் இலவச தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாடவீதியில் உள்ள டி கே பழனிசாமி திருமண மாளிகையில் நடைபெற்றது.

முகாமை திருவொற்றியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் தலைமையில் வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி தொடங்கி வைத்தார். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர். தடுப்பூசியில் முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு அரிசி மற்றும் பேரிச்சம்பழம் பாக்கெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர் தாடி பாலாஜி ,திமுக பகுதிச் செயலாளர் தி.மு தனியரசு, திமுக நிர்வாகிகள் குறிஞ்சி கணேசன், ஆசைத்தம்பி, ஆதிகுருசாமி, சோலையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare