/* */

எட்டு ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய திருவொற்றியூர் ஆதிஷேச தீர்த்த குளம்

குளத்தில் நிரம்பிய தண்ணீரில், தைப்பூசத்திற்கு தெப்போற்சவம் நடத்த முடியும் என கோவில் நிர்வாகம் நம்பிக்கை

HIGHLIGHTS

எட்டு ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய திருவொற்றியூர் ஆதிஷேச தீர்த்த குளம்
X

திருவொற்றியூர் தியாகராஜர் கோவில் குளம் 

கனமழை காரணமாக, எட்டுஆண்டுகளுக்கு பின், திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவில் உள்ளே பிரம்ம தீர்த்த குளம் - வெளியே, ஆதிஷேச தீர்த்த குளமும் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.

மிக்ஜம் புயல் காரணமாக, வடதமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இந்நிலையில், 2015 ம் ஆண்டிற்கு பின், திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவில் குளங்கள் நிரம்பியுள்ளது.

தியாகராஜ சுவாமி கோவில் வெளியே இருக்கும், 2.5 ஏக்கர் பரப்பளவிலான ஆதிஷேச தீர்த்த குளம், 2 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டது.

தற்போது பெய்த கனமழையால், மழைநீர் வடிகால் வழியாக குளத்திற்கு வந்த மழைநீரால், 12 படிகட்டு அளவிற்கு தண்ணீர் தேங்கி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இது மொத்தம் 1.2 லட்சம் லிட்டர் தண்ணீர் ஆகும்.

இந்த மழை காரணமாக குளத்தில் நிரம்பிய தண்ணீரில், தைப்பூசத்திற்கு தெப்போற்சவம் நடத்த முடியும் என கோவில் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்தது.

இதற்கு முன்பு , 2015 ம் ஆண்டிற்கு பின் எட்டு ஆண்டுகளுக்கு பின் குளத்தில் இவ்வளவு தண்ணீர் தேங்குவது குறிப்பிடத்தக்கது.

அதே போல், கோவில் உட்புறத்தில் உள்ள, பிரம்ம தீர்த்த குளமும், நிரம்பி ததும்புகிறது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்

Updated On: 2 Jan 2024 4:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  4. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  5. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  6. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  7. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!