சென்னை பாலவாக்கத்தில் ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடித்தவர் கைது

சென்னை பாலவாக்கத்தில் ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடித்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட இஸ்மாயில்.

சென்னை பாலவாக்கத்தில் ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பாலவாக்கம், கந்தசாமி நகர் 5வது தெருவில் வசித்து வருபவர் கதிரேசன்(32), இவர் அவரது வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி செங்கல்பட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 12 சவரன் தங்க நகை, டிவி, இருசக்கர வாகனம் ஆகியவை கொள்ளை போனது.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்.

இது குறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இஸ்மாயில்(45), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 சவரன் தங்க நகை, டிவி, இருசகக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வழக்கில் முக்கிய குற்றவாளியான லொட்டை மதன் என்பவர் கடலூர் சிறையில் உள்ளார். அவர் மீது 5க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!