அமமுக வர்த்தக அணி மாநில செயலாளர் கட்சியிலிருந்து விலகல்

அமமுக வர்த்தக அணி மாநில செயலாளர் கட்சியிலிருந்து விலகல்
X

 சௌந்தரபாண்டியன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வர்த்தக அணி மாநில செயலாளர் சௌந்தரபாண்டியன் கட்சி இருந்து விலகினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வர்த்தக அணி மாநில செயலாளராக இருந்தவர் எம் சௌந்தரபாண்டியன் இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டார். தற்போது இவர் தான் வகித்து வந்த வர்த்தக அணி மாநில செயலாளர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் விலகுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் விலகல் கடிதம் கொடுத்துள்ளார். பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளன்று இந்திய நாடார்கள் பேரமைப்பு என்ற புதிய அமைப்பை தொடங்குவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தனக்கு இதுவரை பொறுப்புகள் வழங்கியதற்கு டிடிவி தினகரனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!