திருவெற்றியூரில் கடற்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுக்கு சீல்

திருவெற்றியூரில்  கடற்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுக்கு சீல்
X

திருவெற்றியூர் கடற் கரையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

திருவெற்றியூரில் கடற்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

சென்னை 2.0 திட்டத்தின்கீழ் வடசென்னை பகுதியில் உள்ள கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திருவொற்றியூர் ஒண்டிகுப்பம் கடற்கரை சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இருந்த கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருவொற்றியூர் மண்டல அதிகாரி பால்தங்கதுரை தலைமையில் உதவிப் பொறியாளர் உசேன், உதவி செயற்பொறியாளர் ஆனந்தராவ் ஆகியோர்கள் அடங்கிய குழுவினர் ஒண்டிக்குப்பம் பகுதியில் கடற்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த மரக்கடை, மெக்கானிக் கடை உள்ளிட்ட 11 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

மாநகராட்சி அதிகாரிகள் திடீரென்று சீல் வைத்ததால் கடை உரிமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போலீசாரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்