மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகை
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வளம் இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வளம் இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், நாளை (செப் 17) முதல் தமிழ்நாட்டில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
2021 செப்டம்பர் 17 அன்று, திருவொற்றியூர் குப்பம் மற்றும் காசிமேடு மீன் பிடி துறைமுகங்களை அவர் பார்வையிடுகிறார். மீனவர்கள் மற்றும் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்களுடன் அவர் உரையாடவிருக்கிறார். மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு நிதியின் கீழ் மீன்பிடி துறைமுக திட்டம் ஒன்று திருவொற்றியூர் குப்பத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறக்கு மையங்கள், மீன் விதைப் பண்ணைகள், மீன் உணவு தாவரங்கள், குளிர்சாதன உள்கட்டமைப்பு வசதிகளின் உருவாக்கம் ஆகியவற்றுக்காக இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு & பால்வளம் அமைச்சகத்தால் மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு நிதி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஐந்து முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் பொருளாதார நடவடிக்கைகளின் மையங்களாக மேம்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட் 2021-22-ல் இந்திய அரசு அறிவித்தது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் (சென்னை மீன்பிடி துறைமுகம்) அவற்றில் ஒன்றாகும்.
2021 செப்டம்பர் 21 அன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காட்டில் வசிக்கும் மீன்வர்களுடன் உரையாடி, அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து, மீனவ சமுதாயத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான இந்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் விளக்குகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu