வீடு வீடாக சென்று கேக் வழங்கி கிறிஸ்துமசை கொண்டாடிய திமுக இலக்கிய அணி

வீடு வீடாக சென்று கேக் வழங்கி கிறிஸ்துமசை கொண்டாடிய திமுக இலக்கிய அணி
X

சென்னை திருவெற்றியூரில் திமுகவினர் வீடு வீடாக சென்று கிறிஸ்துமஸ் கேக் வழங்கினர்.

சென்னை திருவெற்றியூரில் திமுக இலக்கிய அணி சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது.

உலகமுழுவதும் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும் நிலையில் திருவெற்றியூரில் திமுக இலக்கிய அணி சார்பில் திமுக இலக்கிய அணி அமைப்பாளரும், பிரபல தொழலதிபருமான நித்யாதாசன் கிறிஸ்மஸ் தாத்தாவுடன் வீடு வீடாகச் சென்று அனைவருக்கும் கேக் வழங்கி கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கிறிஸ்மஸ் விழாவை மத நல்லிணக்க விழாவாக கொண்டாடும் வகையில் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் திமுக சார்பில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே தெற்கு மாடவீதி திருமலை அவன்யூ, நெல்லி காரன் தெரு, உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் வீடு வீடாக சென்று கேக் வழங்கினர்.

நிகழ்ச்சியில் பத்தாவது வட்டச்செயலாளர் ஆசைத்தம்பி இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் முரளி மனோகரன் சந்திரன் மற்றும் தமிழ்ச்செல்வன் ராஜேந்திரன் செந்தில் சுரேஷ் கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து மாயாவி மோகன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!