அமைச்சர் சேகர்பாபு- எம்எல்ஏ கே.பி.சங்கர் இடையே மோதல்: சென்னையில் பரபரப்பு..!
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்திய போது. உடன் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டபோது அமைச்சர் பிகே சேகர்பாபு இருக்கும் திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே பி சங்கர் ஆகியோரிடையே வாக்குவாதம் மோதல் ஏற்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடன் சென்றார்.
அப்போது அங்கு வந்த திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கரை அமைச்சரின் பாதுகாவலர் உள்ளே விட மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த கே.பி. சங்கர் அவரை சரமாரியாக திட்டியுள்ளார். இதனையடுத்து அமைச்சரின் பாதுகாவலர் சேகர் பாபுவிடம் புகார் கூறியுள்ளார். அப்போது அங்கு வந்த அமைச்சர் சேகர்பாபு சங்கரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே பரஸ்பர மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆர்.கே. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜேஜே எபினேசர் தன்னையும் இணைத்துக் கொண்டு அமைச்சர் சேகர்பாபு விடம் எனது தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேவையில்லாமல் ஏன் பிரச்சனை செய்கிறீர்கள் என்று வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனை அடுத்து திமுகவினர் இடையே அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலையிட்டு அனைவரையும் சமாதானம் செய்துள்ளார். ஒரே கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே பி சங்கர் மற்றும் எபினேசர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலினிடம் பரஸ்பரம் புகார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu