கொசு பரவாமல் இருக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை: பக்கிங்காம் கால்வாயில் டிரோன் மூலம் மருந்து தெளிப்பு
சென்னையில் கரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் தற்போது மழை காலம் தொடங்க இருப்பதால் எந்த பகுதியிலும் கழிவு நீர் தேங்கவிடாமலும், இதனால் கொசுக்கள் உற்பத்தி ஏற்பட்டு அதன் மூலம் எந்தவித நோய்களும் பரவக்கூடாது என்ற நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் திருவொற்றியூர் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் கழிவு நீரில் கொசுக்கள் பரவாமல் இருப்பதற்காகவும், கால்வாயில் ஆங்காங்கே உள்ள செடிகளில் இருக்கும் கொசு முட்டைகளக அழிப்பதற்காகவும் டிரோன் மூலம் மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்றது. கால்வாயில் மனிதர்களால் சென்று மருந்து அடிக்க முடியாத இடங்களில் இந்த டிரோன் மூலம் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தலைமையில் டிரோன் மூலம் பக்கிங்காம் கால்வாயில் மருந்து அடிக்கும் பணிகள் தொடங்கியது. இதில் மண்டல அலுவலர் தெய்வேந்திரன், செயற்பொறியாளர் பால்தங்கதுரை, மண்டல நல அலுவலர் இளஞ்செழியன், பூச்சியியல் வல்லுநர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் பாலபபிதா ஆகியோர் இந்த பணிகளை மேற்கொண்டனர்.
கால்வாய் பகுதிகளில் மலேரியல் லார்விசைடல் ஆயில் என்ற இந்த மருந்து தெளிப்பதன் மூலம் கொசு புழஎனவும், மற்றும் கொசு முட்டைகள் அழிந்துவிடும் எனவும், இந்த மருந்து தெளிக்கும் இடத்தில் நீரோட்டம் இல்லையென்றால் 15 நாட்கள் இந்த மருந்து கொசு உருவாக்காமல் தடுக்கும் எனவும், நீரோட்டம் இருக்கும் இடத்தில் ஒரு வாரத்திற்கு கொசு உருவாக்காமல் அழிக்கும் எனவும், இதனால் மனிதர்கள் செல்ல முடியாத இடத்தில் விரைவில் மருந்து அடித்து விடலாம் எனவும், இதனால் அதிகளவு நேரம் மிச்சமாகும் எனவும் பூச்சியியல் வல்லுநர் சாந்தி தெரிவித்தார்.
மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவொற்றியூர் பகுதி முழுவதும் ராட்சஷ இயந்திரம் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் பணியையும் துவக்கி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu