மதுரை சிறுமியை கடத்தி வந்து ரகசியமாகக் குடும்பம் நடத்திய ரவுடி -போக்சோ சட்டத்தில் கைது

மதுரை சிறுமியை கடத்தி வந்து ரகசியமாகக் குடும்பம் நடத்திய ரவுடி -போக்சோ சட்டத்தில் கைது
X

லோகேஷ் என்ற தேசப்பன்

மதுரையை சேர்ந்த சிறுமியை கடத்திச் சென்று குடும்பம் நடத்திய தேசப்பன் என்ற ரவுடியை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.

காசிமேடு காசி புரத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் என்ற தேசப்பன் வயது 21 இவர் மீது 2 கொலை வழக்குகள் கொலை முயற்சி வழிப்பறி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் சபரிமலைக்கு அடிக்கடி செல்வதுண்டு என தெரிகிறது சபரிமலைக்குச் செல்லும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட கடையில் பொருட்கள் வாங்குவது வழக்கம் அப்போது அங்கு அந்த கடையில் உரிமையாளரான பாட்டியின் 14 வயது பேத்தியுடன் இவருக்கு போன் மூலம் நட்பு அந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.

போன் மூலமாக பேசி இருவரும் காதலாக வளர்த்துக் கொண்டனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிறுமியை இவர் ரகசியமாக சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார். அந்த சிறுமியிடம் இவர் குடும்பம் நடத்தியதாக தெரிகிறது தற்போது அந்த 17 வயது சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் போலீஸார் துணையுடன் சென்று பார்த்தபோது தேசப்பன் சிறுமியை திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக தேசப்பனின் தாய் கீதா செயல்பட்டதும் தெரிய வந்தது. கீதாவும் தேசப்பனும் கைதுசெய்யப்பட்டனர். சிறுமி காப்பகத்தில் விடப்பட்டுள்ளார்.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!