புளியந்தோப்பில் இருசக்கர வாகன திருடன் கைது - வாகனம் பறிமுதல்

புளியந்தோப்பில் இருசக்கர வாகன திருடன் கைது -  வாகனம் பறிமுதல்
X

சல்மான் பாஷா

புளியந்தோப்பில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை புளியந்தோப்பு பழைய ஆடு தொட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், வயது 44. இவர், மாதவரம் பகுதியில் உள்ள தனியார் கொரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 1ஆம் தேதி இரவு வேலைக்கு சென்று விட்டு, தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது, தனது இரு சக்கர வாகனம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு குற்றப்பிரிவு போலீசார், சிசிடிவி கேமரா கட்சியில் அடிப்படையில் விசாரித்தனர். இது தொடர்பாக, புளியந்தோப்பு ராமசாமி தெரு பகுதியை சேர்ந்த சல்மான் பாஷா 21 என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து காணாமல் போன இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சல்மான் பாஷா மீது திருவல்லிக்கேணி. அயனாவரம். கொடுங்கையூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்