ஓட்டேரியில் வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

ஓட்டேரியில் வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

பைல் படம்

ஓட்டேரியில் வாலிபரை கத்தியால் வெட்டி செல்போனை பறித்த ஆசாமிகள் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை ஓட்டேரி சுப்புராயன் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் வயது 23. இவர் சோழிங்கநல்லூரில் உள்ள இரு சக்கர வாகன ஷோரூமில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு 12 மணியளவில் வேலை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது ஓட்டேரி கே எம் கார்டன் பெரம்பூர் பேரக்ஸ் சாலை பகுதியில் இரண்டு பேர் வழிமறித்து செல்போனை பறிக்க முயன்றனர்

அப்போது கணேஷ் செல்போனை தர மறுக்கவே மர்ம நபர்கள் இரண்டு பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து கணேஷை வெட்டனர். லேசான காயங்களுடன் அங்கிருந்து தப்பித்த கணேஷ் செல்போனை அவர்களிடம் கொடுத்துவிட்டு அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஓட்டேரி ரோந்து போலீசாரிடம் நடந்ததை கணேஷ் கூறியுள்ளார் இதனையடுத்து ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பக்தியுடன் சுற்றித் திரிந்த இரண்டு பேரையும் மடக்கி பிடித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் புளியந்தோப்பு கே எம் கார்டன் 6வது தெருவைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்கின்ற நாய்க்கறி ரமேஷ் 21. மற்றும் அதே பகுதியை சேர்ந்த வல்லரசு வயது 20 என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ஒரு செல்போன் ஒரு கத்தி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story