புளியந்தோப்பு பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

புளியந்தோப்பு பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட பிரகாஷ் என்கின்ற ஸ்டீபன், தவக்களை என்கின்ற சந்தோஷ். 

புளியந்தோப்பு பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

புளியந்தோப்பு பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை புளியந்தோப்பு சூளை ஆவடி சீனிவாசன் தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் வயது 30 இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு தனது இரு சக்கர வாகனத்தை தனது வீட்டின் முன் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார். காலை வந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து பேசின்பிரிட்ஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திருடர்களைத் தேடி வந்த நிலையில் நேற்று மாலை புளியந்தோப்பு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வாகன சோதனையில் பேசின்பிரிட்ஜ் போலீசார் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான இருவரை மடக்கி பிடித்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி தெரு பகுதியை சேர்ந்த தவக்களை என்கின்ற சந்தோஷ் வயது 20 மற்றும் புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்கின்ற ஸ்டீபன் 21 என்பது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் வெங்கடா சலத்தின் இருசக்கர வாகனத்தை திருடியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இவர்களிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!